பக்கம்:புதிய கோணம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 புதிய கோணம்

கொண்டனர் என்று நினைக்கத் தோன்றுகிறது. திருஞானசம்பந்தர் காலத்தில் பல்லவர் ஆட்சி வலிவுடன் தமிழகத்தில் கால் கொள்ளத் தொடங்கியது. தண்டன் தோட்டச் செப்பேட்டின் படிப் பார்த்தால் பல்லவர்கள் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த வைதிகர்களை ஆயிரக் கணக்கில் வடக்கே இருந்து தருவித்துத் தமிழகத்தில் குடியேற்றினர் என்று அறிய முடிகிறது. இறக்குமதி செய்யப் பெற்ற வேத வழக்கொடுபட்ட இந்த வைதிகர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும், கடிகைகளிலும் வேத பாடசாலைகளிலும், மடங்களிலும் பணிசெய்ய வாய்ப்பளிக்கப் பெற்றது. இந்த வைதிகர்கள் இத்தமிழர் போற்றும் சிவ வழிபாடு, கோயில் பூசை, அபிடேகம், அர்ச்சனை, தமிழில் பாடுதல் என்ற எதனையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். இவர்கள் செய்த வாஜபேயம் முதலான 21 வகை வேள்விகள் எதுவும் சிவ பெருமானைத் தலைவனாகக் கொண்டு செய்யப் பெற்றவை அல்ல. ஆகமங்கள் என்பனவற்றையும், அவற்றிற் குறிக்கப்பெற்ற வழிபாட்டு முறைகளையும் இவர்கள் ஏற்கவில்லை. மேலும் தமிழ் மொழியின் சிறப்பையோ, அம்மொழி மூலம் வழிபாடு செய்யலாம் என்பதையோ இவர்கள் அறியாதவர்கள். கோவில், விக்ரகவழிபாடு என்பவற்றை நம்பாதவர்கள் ஆயினும் பல்லவர்கள் இவர்கட்கு வேலை தரவேண்டும் என்பதற்காகக் கோயில் பூசகர்கள்ாக இவர்களை நியமித்தனர். நம்பிக்கை இல்லாவிடினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/186&oldid=659895" இலிருந்து மீள்விக்கப்பட்டது