பக்கம்:புதிய கோணம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 புதிய கோணம்

ஆக முதல் நாற்கவியும் அட்டாவதானமும் சீர்ப் பேசும் இயல் பல்காப்பியத் தொகையும்-ஓசை எழுத்து முதலாம் ஐந்திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப் புலமை பாலித்து. . . .

(சகல. மாலை: 18, 119)

அருள வேண்டும் என்பது அவருடைய வேண்டு கோள். இதனையடுத்து அவர் வேண்டும் ஒன்றையுங் காண்டல் வேண்டும்.

இம்மைப் பிறப்பில் இருவாதனை அகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத்-தம்மை வருத்து ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்

அடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட் கொண்டு அடியேற்கும் முன்னின்று அருள். . . . . . . *

(கலிவெண்பா 120-22)

என்பதே அவர் வேண்டுவது.

அகப்பற்று முதலியவற்றைத் தடிய வேண்டும், பழைய அடியாருடன் கூட வேண்டும், அவன் திருவடிகளைக் காணவேண்டும், அதற்கு அவன் அருள் புரிய வேண்டும், என்று வேண்டுபவர் இதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, கவிபாடும் சக்தியும் பழுத்த தமிழ்ப் புலமையும் வேண்டும் என்று கேட்பது விந்தையேயாகும் 120-22 கண்ணிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/190&oldid=659900" இலிருந்து மீள்விக்கப்பட்டது