பக்கம்:புதிய கோணம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 புதிய கோணம்

‘. . . . . . . . . . . . . முதற் சங்க

தலைப்பா வலர்தீஞ் சுவைக் கனியும்

தண்தேன் நறையும் சுவைக் கனியும்

சாரம் கனிந்துஊற் றிருந்த பசும்

தமிழும் நாற . . . . .

/// திருவாயில் தமிழ் மணம் வீசுகிறது என முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் பாடுகின்றார்.

இதுவரைக் கூறியவற்றை ஒருமுறை படிப்பவரும் 8 முதல் 20ஆம் நூற்றாண்டுவரை இருந்த புலவர்களுள் தமிழுக்கு 234 இடங்களில் இத்துணைச் சிறப்புத் தந்து பாடியவர் வேறு யாரும் இல்லை என்பதை அறிய முடியும். 7ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் இதே போலப் பாடக் காரணம் யாது என்பது முன்னர்க் குறிக்கப் பெற்றது.

17ஆம் நூற்றாண்டில் தெலுங்கர் ஆதிக்கத்தில் தமிழ் வளம் குறைந்த நிலையில் இம்முணிபுங்கவர் தோன்றித் தமிழின் பெருமையைக் கூறித் தமிழர்களைத் தட்டி எழுப்ப முனைகின்றார்.

7ஆம் நூற்றாண்டிலும் 17ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மொழியின் நிலைமை ஒரே மாதிரியாக இருந்தமையாலும் முதலில் வடமொழி ஆதிக்கமும் பின்னர்த் தெலுங்கு, கன்னட மொழிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/194&oldid=659904" இலிருந்து மீள்விக்கப்பட்டது