பக்கம்:புதிய கோணம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் தமிழைப் பாடியது ஏன்? 187

ஆதிக்கமும் தமிழை அழுத்தினமையால்தான் இந்த இருவரும் இப்பணியில் ஈடுபட்டனர். இதிலும் ஒரு தனிச் சிறப்பைக் காணமுடிகிறது.

இருவருமே கருவில் திருவுடையவர்கள். இருவருமே ஏட்டுக் கல்வியை முறையாக யாரிடமும் பயிலாமல் திருவருளால் உவமையிலாக் கலை ஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் (பெ.பு: 1973) ஆகிய இரண்டையும் கைவரப் பெற்றவர்கள். இருவருமே குழந்தைப் பருவத்தில் தாம் உலகிடை வருவதற்கு காரனமான பணியைத் தொடங்கிவிட்டனர். வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள் எனினும் இறைவனுக்கு உகந்தது மலர் மாலையைவிடத் தமிழ்ப் பாமாலையேயாகும் என்பதை நன்கு அறிந்து உணர்ந்து கூறியும் சென்றுள்ளனர். சொன் மாலை, பாமாலை என்று தம் பாடலைப் பிள்ளையார் பன்முறை கூறுகிறார். குமரகுருபரரும் ஒண்மலர் சொல் மலர்க்கு ஒவ்வாது போலும் என்றே கூறுகிறார். வேற்று மொழி ஆதிக்கத்தால் தமிழ் மொழி தளர்வுற்ற நிலையில் அதனைக் கைதுாக்கி விட வந்தவர்கள் ஆதலின் ஓயாமல் தமிழின் பெருமையைப் பிள்ளையாரும் தவமுனிவரும் கூறினர் என்பதை நினைவில் கொள்ளுதல் நலம்.

இருபதாம் TppITT4-7 தொடக்கத்தில்

எட்டாவது வகுப்புவரை படித்த அறிஞர்கள் ‘எனக்கு டமில்லே பேசவராது’ என்று கூறித் திரிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/195&oldid=659905" இலிருந்து மீள்விக்கப்பட்டது