பக்கம்:புதிய கோணம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 புதிய கோணம்

மனிதனுடைய அறிவு வளர்கின்றது என்பது உண்மைதான். அறிவின் தொழில் வேறு. உள்ளதையும், கருத்துக்கு அடங்கியதையும், அதற்கு அப்பாற்பட்டதையும் ஆய்ந்து பார்ப்பது அறிவின் தொழில்.

மூளையின் உள்ளே அமைந்திருக்கிற நியூ ரான்கள்’ (Neurones) என்று சொல்லப்படும் அணுக்கள், மின்சார இயக்கம் பெற்று, பல்வேறு ரசாயன மாறுபாடுகளை அடைவதன் மூலம் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன. அவ்வாறு தோற்றுவிக்கப்படும் எண்ணங்கள் ஒரு ஒழுங்கு முறைக்கு உட்பட்டு வளருமேயானால், அது அறிவின் செயலாகும். அறிவினால் ஆராய்ந்து காண்பது இதுதான். ஆனால் உலகத்தில் உள்ள எல்லா வற்றையுமே அறிவினால் ஆராய்ந்து பார்த்துவிடுவது என்று தொடங்கினால், அது வெங்காயத்தை உரிக்கும் கதையாகிவிடும். அறிவு, உணர்வு என்ற இரண்டும் மனிதர்களுக்கு கடவுளால் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அறிவின் தொழில் ஒன்று; உணர்வின் தொழில் மற்றொன்று. அறிவு தொழிற்பட வேண்டிய நிலை நாளாவட்டத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மனித சமுதாயத்தின் அறிவு வளர்ச்சி, இந்த நூற்றாண்டின் முடிவில் பல நூறு மடங்காக விரிந்துவிட்டது என்பதை அறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/198&oldid=659908" இலிருந்து மீள்விக்கப்பட்டது