பக்கம்:புதிய கோணம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூக செழுமைக்கான உரம் 191

அறிவு மேலும், மேலும் வளர, நேற்றிருந்தது இன்று இல்லாததாகவும், நேற்று உண்மை என்று கருதப்பட்டது இன்று தவறானதாகவும் போய் விடுவதைக் காணமுடிகிறது. இப்படி மாறுபடுகின்ற அறிவின் அடிப்படையில் ஒரு காலத்தில் காணப் பட்ட ஒன்று, இதுதான் முடிவான, இறுதியான உண்மை என்று சொல்லப்பட்ட ஒன்று, மிகச் சில காலங்களிலேயே மாறுதல் அடைவதைக் காண்கின்றோம். இதைப் புரிந்து கொள்வது மிக மிக இன்றியமையாதது. மனிதனுக்கு ஆண்டவன் அறிவை மட்டும் தரவில்லை, உணர்வையும் தந்திருக்கின்றான். எவ்வளவு தான் அறிவு தொழிற் படுவதாக இருந்தாலும், சிறப்புடையதாகயிருந்தாலும், அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த அறிவின் தொழிற்பாட்டில் பண்பாடு என்பது கலக்குமே ஆனால் அது பயனுடைய அறிவாகும். இல்லா விட்டால் அதுமிகக் கூர்மையான வாள் போன்று இருக்கும். இந்தப் பண்பாடு என்பது உணர்வின் அடிப்படையில் தோன்றுவதாகும். மனித சமுதாயம் முழுவதையும், பண்பின் அடிப்படையில் பார்க்கும் போது காட்சியே வேறானதாகிவிடும் அறிவின் அடிப்படையில் மனித சமுதாயத்தை ஆராய்ந்தால், இவன் இன்ன இனத்தைச் சேர்ந்தவன், இன்ன நாட்டைச் சேர்ந்தவன், இந்தப் பண்பாட்டிற்கு உரியன், எனக்கும், இவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, உறவு என்ன என்ற முறையில் அறிவு தொழிற்பட்டுச் சென்று உலகத்தில் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/199&oldid=659909" இலிருந்து மீள்விக்கப்பட்டது