பக்கம்:புதிய கோணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 o’ புதிய கோணம்

தகைசால் பூங்கொடியாய், மலரிடைத் தோன்றும் - இலக்குமியாய்க் காட்சியளித்த ஒரு பெருமாட்டி, இத்தகைய கொடுமை நிறைந்த காட்சியை எங்ஙனம் நல்க முடியும்? நோக்கினால் அவருடைய மனத்தில் நேர்ந்த மாறுபாடு காரணமாகவே இத்தகைய மாற்றம் - நிகழ்ந்ததோ என்று ஐயுறவேண்டியுள்ளது. கதிரவனை விளித்ததும், மானிடப் பெண்ணாகிய அவளுக்குச் செங்கதிர்ச் செல்வன் விடை இறுத்ததும் இந்த ஆணவம் வலுப்பெற்று வெளிப்படக் காரணமாயிற்று போலும். எல்லையற்ற துயரத்தின் காரணமாக இதுவரை அமிழ்ந்திருந்த ஆணவமலம் வெளிப் பட்டதனால் இக்கொடுங்காட்சியை நல்கினார் போலும். இனி,

“மட்டார் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன், பட்டாங்கி யானும் ஓர் பத்தினியே யாமாகில், ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்; என் பட்டிமையும் காண்குறுவாய் நீ”

- (சிலம்பு 21, 35)

என்று பேசும் பேச்சும் இக் குற்றம் மீதுார்ந்து நின்ற நிலையை அறிவுறுத்துகிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

மதுரை எரியத் தொடங்குகையில் மாபத்தினியின் சினம் ஒருவாறு தணிந்துவிடக் காண்கிறோம். அன்றியும், தீக் கடவுள் அவர் முன்தோன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/20&oldid=659910" இலிருந்து மீள்விக்கப்பட்டது