பக்கம்:புதிய கோணம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூக செழுமைக்கான உரம் 193

இந்தக் கதைகளையோ, புராணங்களையோ, இதிகாசங்களையோ, அறிவின் துணைகொண்டு ஆராயத் தொடங்கினால் பல நேரங்களில்

இடுக்கண்தான் மிஞ்சும். எல்லாவற்றையும் அறிவின் அடிப்படையில் ஆராய முடியாது என்பதை முன்னரே கண்டோம். தந்தை மகனிடத்தில் வைக்கின்ற அன்பு, மகன் தந்தையிடத்தில் வைக் கின்ற அன்பு, கணவன் மனைவியிடத்தில் வைக்கின்ற அன்பு, மனைவி கணவனிடத்தில் வைக்கின்ற அன்பு, உறவினரிடையே விரிகின்ற அன்பு, இவற்றை எல்லாம் அறிவின் துணை கொண்டு ஆராயத் தொடங்கினால் இந்த அன்பு என்பதே அபத்தம் என்று சொல்லக் கூடிய நிலைமைக்கு வந்துவிடுவோம். அன்பு மனித இனத்தை, மக்களை ஒன்று சேர்ப்பதற்குரிய ஒரு கருவியாகும். இந்த அன்பு தேவைதானா என்ற ஆராய்ச்சியில் புகுந்தால் பெரும்பாலும் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம். அங்கே தான் என்பது முனைந்து நிற்கக் காண்கிறோம். இந்தத் தான் முனைய முனைய, அறிவு தொழிற்படும் பொழுது, உலகம் முழுவதிலும் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நான் தான் மிச்சம் என்ற நிலைமைக்கு கொண்டு போய் விட்டு விடும். இதன் எதிராக, உணர்வு என்பது தான்’ என்பதை அறவே அழித்துவிட்டு எல்லோரையும் ஒன்றாய்க் காணுகின்ற ஒருமைப் பாட்டை, நமக்குத் தருவதாகும். இந்த ஒருமைப் பாட்டின் அடிப்படையில்தான் மித்தாலஜி’ தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/201&oldid=659913" இலிருந்து மீள்விக்கப்பட்டது