பக்கம்:புதிய கோணம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூக செழுமைக்கான உரம் 197

பொழுது அது, மெல்ல மேற்கே நகர்ந்து சென்று கேரளத்தில் காலூன்றியிருக்கிறது. அது எதை அறிவிக்கிறது என்றால், ஒவ்வொரு சமுதாயமும் இது போன்ற விழாக்களையும், பழைய கதைகளையும் தேவையான போது பயன்படுத்திக் கொண்டன. அவற்றினால் சில பயன்களை அடைந்தன. நாளா வட்டத்தில் அந்தத் தேவையில்லாத போது, இந்தக் கதைகள் நம்மை விட்டுப் போய்விடுகின்றன. தமிழகத்தில் ஆகட்டும், இந்தியாவில் ஆகட்டும் ஆயிரக்கணக்கான கதைகள் மறைந்துவிட்டன. ஏனென்றால், இந்த இனத்திற்கு அந்த கதைகளினால் இப்பொழுது பயன் ஒன்றும் இல்லை. பயன் இல்லாத பொழுது அவை, காய்ந்த சருகுகள் போல், உதிர்ந்து விடுகின்றன. -

ஆனால் இந்த இலைகள் காய்வதற்கு முன்னர் அந்த மரத்திற்கு, செடிக்குப் பெரும்பயனைக் கொடுத்தன என்பதை மறக்கக் கூடாது. அதுபோல் இன்று தேவையில்லாத கதைகள், தாமே அழிந்து விடுகின்றன. இதை அறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்து, இவை பைத்தியக்காரத்தனமான கதைகள், நம்பத்தகாத கதைகள் என்று சொல்பவர்கள் பெரும்பாலும், அறிவு இன்னது என்பதை அறியாமலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறியாமலும் உள்ளார்கள். ஏனென்றால் ‘மித்தாலஜி என்று சொல்லப்படுகின்ற இந்தப் பழைய கதைகள் இல்லாத நாகரிகமே இல்லை. மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/205&oldid=659917" இலிருந்து மீள்விக்கப்பட்டது