பக்கம்:புதிய கோணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கோணம் , 13

“மாபத்தினி நின்னை மாணப் பிழைத்தநாள்,

பாய் எரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்

ஏவல் உடையேனால்”

(சிலம்பு 21, 50)

என்று கூறினவுடன், மதுரை நகரைத் தண்டிக்க வேண்டிய பொறுப்புத் தம்முடையதென்று கூறிக் கொண்டிருந்த பெருமாட்டிக்கு ஒரு புதிய அதிர்ச்சி ஏற்பட்டதுபோலும்! மதுரையை நானே அழிப்பேன் என்று தொடங்கிய அத்தேவியின் முன்னர், அவ்வாறு அழியவேண்டிய நியதி பண்டே ஏற்பட்டுள்ளதென்று அக்கினித் தெய்வம் கூறியது, தம் சக்தியை ஒரளவு விரித்துக்கண்ட கண்ணகி யாருக்கு எதிர் மறையாக அமையக்காண்கிறோம். அக்கினிக் கடவுளின் கூற்றால் ஒருண்மை புலப்பட்டே திரும். அதாவது, மதுரை எரியுண்டது என்றால் அது மாபத்தினியால் அன்று; அவர் ஒரு துணைக் 5f L, அமைந்தாரே அன்றி முதற் காரணமல்ல என்பதே அது. எனவே, துணைக் காரணமாகி நிற்கின்ற அவர், தம்மை முதற்காரணம் என்று நினைத்து “மதுரையை அரசோடு ஒழிப்பேன்’ என்று கூறியது, ஒரளவு பொருத்தமிலாக் கூற்று என்பதை நாமே அறிய முடிகிறதாதலின், இதனை, அப்பெருமாட்டி எளிதில் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/21&oldid=659922" இலிருந்து மீள்விக்கப்பட்டது