பக்கம்:புதிய கோணம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - சித்தன் 203

இச்சையாகும். ஒருவர், மகான் ஸ்ரீஅரவிந்தர். இப்பெருமகன் உலகம் கண்டு வியக்கும் யோகியாக அக்காலத்திலேயே அறியப்பட்டவர் ஆவார். மற்றொருவர், உலகம் ஒருபுறம் இருக்கப் புதுவையில் உள்ளவர்கள்கூட அறிந்து கொள்ள முடியாத குள்ளச்சாமி என்ற பெயருடைய ஒரு சித்தர் ஆவார். யோக வழியைப் பின்பற்றி ஓர் உயர்நிலை அடைந்த பெருமை உடையவர் ஸ்ரீஅரவிந்தர் ஆவார். கல்விக் கடலைக் கரை கண்டு உணர்ந்த அப்பெரியார் பல நூல்கள் இயற்றியவர், பல மொழிகளில் வல்லவர் என்றாலும் அவருடைய கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாக அமைந்து விடாமல் ஆன்ம முன்னேற்றத்தைத் தரும் கல்வியாக அமைந்ததுடன் பரம்பொருளை அறியும் அறிவு விளக்கத்தைத் தரும் கல்வியாகவும் அமைந்தது.

இந்நாட்டவர் பரம்பொருளைப் பற்றிக் கூறும் பொழுது கற்பனை கடந்த அப்பொருள் நிர்குண, நிராமைய, நிராலம்பமாக எங்கும் நிறைந்திருக்கிறது என்று கூறினர். அப்பொருளால் படைக்கப்பட்ட இந்த ஆன்மாக்கள் அரிதின் முயன்று, பொறிபுலன் களை அடக்கி ஒருமுகப்பட்ட நெஞ்சுடன் அவனை நினைந்து இறுதியாக அவன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற இப்பழங்கருத்தை மாற்றி அமைத்து ஒரு புதுமையைச் செய்தவர் ரீஅரவிந்தர், கோடிக் கணக்கான உயிர்கள் அரிதின் முயன்று அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/211&oldid=659924" இலிருந்து மீள்விக்கப்பட்டது