பக்கம்:புதிய கோணம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 புதிய கோணம்

திருவடிகளை அடைவதைக் காட்டிலும் அவனே கருணை கூர்ந்து இவ்வுலகிற்கு வந்துவிட்டால் அது பெரும்பயன் அளிக்கும் என்று கருதினார். அவர் தான் முதன்முதலில் இறைவனை பூமிக்கு வருமாறு அழைத்தவர் ஆவார். கிருஷ்ணனாகவும், இராமனாகவும், மாணிக்கவாசகருக்குக் குருந்த மரத்தடியில் குருவாகவும் வந்தவன் இறைவன் தானே! எனவே, இறைவனை இவ்வுலகிற்கு வா என்று அழைப்பதில் என்ன புதுமை உள்ளது என்று சிலர் நினைக்கலாம். இந்த இராம, கிருஷ்ண அவதாரங்கள், தாம் இங்கிருந்த காலத்தில் ஒரு சிலருக்கு அருள் செய்ததும் உண்மை தான். குருந்த மரத்தடியில் இருந்த ஞானகுரு மணிவாசகருக்கு அருள் செய்ததும் உண்மை தான். இப்படி ஒரு சிலருக்கு மட்டும் அருள் புரியும் நிலையை மாற்றி இங்குள்ள எல்லா உயிர்களும் பயன்பெற நீ இங்கு வருவாயாக என்று இறைவனை முதன் முதலில் அழைத்தவர் ரீ அரவிந்தர் ஆவார்.

அவருடைய தாக்கம் பாரதிக்கு ஏற்பட்டது என்பதை அவன் பாடிய முருகா-முருகா வருவாய் என்ற பாடலில் காண்கிறோம். இவ்வுலகில் வாழும் உயிர் அனைத்திற்கும் என்னென்ன வேண்டுமென்று கவிஞன் இதோ பட்டியலிட்டுக் காட்டுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/212&oldid=659925" இலிருந்து மீள்விக்கப்பட்டது