பக்கம்:புதிய கோணம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 புதிய கோணம்

வடிவேலுடன் வரவேண்டும் மயில் மீதினில் என்று பாடுகிறான். t -

உலகம் முழுவதற்கும் அருள் தருவான் வேண்டி இறைவனை இவ்வுலகிடை வருக என்ற கருத்தை பூர் அரவிந்தரை ஒட்டி கவிஞன் பாடியதை மேலே கண்டோம். அதன்பிறகு அவனுடைய சுடர்மிகும் அறிவு மற்றொரு சிந்தனையில் ஆழ்ந்தது. எண்பத்தி நான்கு இலட்சம் வகைப்பட்ட உயிர்கள் வாழும் இவ்வுலகிடை அப்பரம்பொருள் வந்தால் எத்தனை உயிர்கள் அவனைப் புரிந்து கொள்ள முடியும். நாம ரூபமற்ற அந்தப் பரம்பொருள் எந்த வடிவுடன் இந்த உலகிற்கு வருகிறதோ அந்த வடிவு பெற்ற இனம் மட்டுமே அவனை ஒரளவு அறிய முடியும். மனித வடிவில் இருந்த இராமனை, அரக்கர் வடிவிலிருந்த இராவணன் புரிந்து கொள்ள வில்லையே. இதனை மனத்துட் கொண்டுதான் சுவாமி விவேகானந்தர், மீன்களெல்லாம் கூடி தமக்கொரு கடவுளைப் படைத்தால் அக் கடவுளுக்கு மீன் வடிவத்தைத்தான் தரமுடியுமே தவிர வேறு வடிவம் தராது என்றார். எனவே, மனிதர்கள் உயிர் வர்க்கத்தில் முதலிடம் வகிப்பவர்கள் ஆதலின் அம்மனிதர்கள் அறிந்து கொள்ளக்கூடிய கடவுள் வடிவம், ம்னித வடிவமாகத் தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான் கவிஞன். அதற்கு மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/214&oldid=659927" இலிருந்து மீள்விக்கப்பட்டது