பக்கம்:புதிய கோணம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - சித்தன் 207

அவனுடைய மனம் மற்றொரு சிந்தனையில் சென்றது. பல கோடி உயிர்களின் தேவை அறிந்து அவற்றிற்கு அருள்புரியும் இறைவனது பணியில் ஒரு பகுதியைத் தான் ஏன் மேற்கொள்ளலாகாது என்று நினைக்கிறான். சிறிய அதிகாரிகள் எடுக்கும் சில முடிவுகளை, அவர்களின் மேலதிகாரிகள் ஒப்புக் கொள்கிறேன் (agreed) என்று சொல்வதில்லையா? அதே போல இறைவனுடைய அனுமதிபெற்று அவனுடைய பணியில் ஒருபகுதியை சுப்ரமணிய பாரதி என்ற சித்தன், தான் மேற்கொண்டு அப் பணியைச் செய்ய விரும்புவதாகவும், அதற்கு இறைவன் அப்படியே என்று சொல்ல வேண்டும் என்றும் விரும்புகிறான்.

ஓம்கார வடிவினனாய் தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவனாய் எங்கும் நிறைந்துள்ள விநாயகப் பெருமானை நோக்கி, புதுவையில் குடி புகுந்த இச்சித்தன் இதோ வேண்டுகிறான்.

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன், மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே இன்பமுற் றன்புட னினங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும், தேவதேவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/215&oldid=659928" இலிருந்து மீள்விக்கப்பட்டது