பக்கம்:புதிய கோணம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - சித்தன் 209

“நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்; அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்; வேண்டாதனைத்தையு நீக்கி வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே.” -

(பாரதி கவிதைகள்)

இவ்வரிகள் அனைவரும் பொன்னே போல் போற்ற வேண்டியவை ஆகும். எது வேண்டும், எது வேண்டாம் என்பதை சிற்றுயிர்கள் அறிய முடியாது. ஆகையினால் மணிவாசகப் பெருந்தகை,

வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்டு முழுவதுந்

தருவோய் நீ (திருமுறை: 8,83,5)

என்று இதே கருத்தைக் கூறுவதைக் காணலாம். இன்னும் ஒரு படி விளக்கமாக கவிச்சக்கரவர்த்தி இதனைக் கூறுகிறார்.

- - - o ‘o - - - யாஅம் இரப்பவை பொன்னும், பொருளும், போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் - உருள் இணர் கடம்பின் ஒலிதாரோயே

(பரி பாடல்-5)

என்று பாடுவதைக் காணலாம். அன்றாட வாழ்விற்கு வகை செய்து கொள்ள முடியாமல் தவித்த இக்கவிஞன், விநாயகப் பெருமானிடம் பொன்னை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/217&oldid=659930" இலிருந்து மீள்விக்கப்பட்டது