பக்கம்:புதிய கோணம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 புதிய கோணம்

பொருளை, போகத்தை வேண்டிலன். அதற்கு பதிலாக எல்லா உயிர்களையும் வாழ்விக்க வேண்டி இறைவனைப் பணிகின்றான். பரிபாடல் கூறியபடி விநாயகப்பெருமானை வேண்டி தன் மனத்தில் அன்பையும், அருளையும் நிறைத்துக் கொண்டபின் உலகிடை வாழும் உயிர்க் குலங்கள் அனைத்தும் வாழ வேண்டும் என்று நான் கேட்பேன், ஆகட்டும் என்று நீ சொல்ல வேண்டும் என்று வேண்டுகிறான்.

இந்த ஆன்மீக வளர்ச்சியைக் கவிச்சக்கரவர்த்தி எங்கே யாரிடம் எப்போது பெற்றான் என்ற வினாக்கட்கு விடை காண்பது பயனுடைய செயலாகும். புதுவையில் பலரும் பயித்தியக்காரன் என்று கூறும் ஒரு துறவி, சித்தன் வாழ்ந்து வந்தான். அந்தத் துறவி தெருவிலே வாழ்கின்ற வயது வந்த மக்களைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் யாருடன் பழகினான் தெரியுமா? சிறியாரோடும், நாய்களோடும் விளையாடித் திரிந்தான், கந்தை கட்டித் திரிந்தான். அவன் பெயர் குள்ளச்சாமி என்றும், மாங்கொட்டைச்சாமி என்றும் ஒருசிலர் கூறினர். பளிங்கு போன்ற அவன் மனம் வஞ்சகமற்ற குழந்தைகளையும், நன்றி மறவாத நாய்களையும் தோழமை கொண்டது. இந்த மனிதனை ஒருநாள் பாரதி காண்கின்றான். எங்கே எந்த நிலையில் என்று கவிஞன் இதோ கூறுகிறான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/218&oldid=659931" இலிருந்து மீள்விக்கப்பட்டது