பக்கம்:புதிய கோணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புதிய கோணம்

இதனையடுத்து, மதுராபதித் தெய்வம், ஒரு முலை குறைத்த திருமா பத்தினியின் பின்னர் வந்து

“கேட்டிசின் வாழி நங்கை என்குறை’ (சிலம்பு 23, 17)

என்று பேசும்பொழுது வழக்குரைத்த குழ் நிலையிலோ, அன்றி அழற்படுத்த சூழ்நிலையிலோ உள்ள கண்ணகியை நாம் காணவில்லை. அதன் எதிராக, அடக்கமே உருவான பழைய கண்ணகியை, ஒரளவு அவலம் நிறைந்த, துயரம் நிறைந்த கண்ணகியைக் காண்கின்றோம். ஆதலால்தான் என் பின்னர் வருகின்ற நீ யார்? என் துயரத்தை அறிவையோ?” என்ற பொருளில்,

“வாட்டிய திருமுகம் வலவயின் கோட்டி, யாரைநீ என்பின் வருவோ என்னுடை ஆர்அஞர் எவ்வம் அறிதியோ வென (சிலம்பு 23, 18)

என்று கேட்கின்றார். அடுக்கி வருகின்ற துன்பங்கள் மக்களை இருவகையாகப் பாதித்தலைக் காண்கின்றோம். சாதாரண மக்கட்குத் துன்பம் நேர்கையில் அவர்களைக் காழ்ப்புடையவர்களாகவும்

கொடுமை நிறைந்தவர்களாகவும் மாற்றக் காண்கிறோம். பண்பாடுடையாருக்கு வரும் துன்பங்கள் பொன்னைக் காய்ச்சப் பயன்படும்

நெருப்புப் போன்றவை. நெருப்பு, பொன்னை மாசு நீக்கி ஒளியடையச் செய்வதுபோல இத்துன்பங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/22&oldid=659933" இலிருந்து மீள்விக்கப்பட்டது