பக்கம்:புதிய கோணம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 புதிய கோணம்

முன்னர் அக்கவிஞனுடைய மனத்தில் எத்தகைய தர்க்கத்தை ஏற்படுத்தினான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குள்ளச்சாமியை சந்தித்த நேரமே ஓர் அற்புதமான நேரமாகும். உபநிடதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைத் திருத்துவதற்காகக் கவிஞன் நாகைப் பார்ப்பான் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறான். என்ன விந்தை! உபநிடதங்கள் கூறும் பிரம்ம ஞானியின் இலக்கணத்தை முழுவது மாகப் பெற்றுள்ள ஒரு ஞானி எதிரே வருகிறான். உபநிடதங்கள் எழுதியுள்ள தாள்களைக் குனிந்து படித்துக் கொண்டிருக்கும் கவிஞன் தலையை நிமிர்த்தினான். என்ன அதிசயம்! அந்த நூல் கூறும் ஞானி எதிரே நிற்கிறான். ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இருநிலைகள். உடம்பு, உடை இவை அவன் பயித்தியக்காரனென்று பறை சாற்றுகின்றன. இந்த உடம்பின்மேல்பட்ட பார்வையைச் சற்று உயர்த்தி குள்ளச்சாமி கண்களைப் பார்க்கிறான் கவிஞன். கடலினும் பெரியவாய அக்கண்களின் ஊடே ஒரு பிரம்ம ஞானி காட்சி அளிக்கிறான். புறத்தை விட்டுவிட்டு, அகத்தைக் காணும் ஆற்றல் உடைய கவிஞன் இந்த பயித்தியக் கோலத்தின் உள்ளே ஞானி ஒளிந்திருப்பதைக் காணுகின்றான். உடனே சிவபெருமான் நினைவு வருகிறது கவிஞனுக்கு சுடுகாட்டில் பேய்களோடு ஆடும் பித்தன்தானே சிவன். அந்த நினைவு வந்தவுடன் ஞானியைப் பார்த்துக் கவிஞன் பேசுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/220&oldid=659934" இலிருந்து மீள்விக்கப்பட்டது