பக்கம்:புதிய கோணம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - சித்தன் 213

“பாவனையிற் பித்தரைப் போலலைவ தென்னே? பரமசிவன் போலுருவம் படைத்ததென்னே?”

என்பதால் எதிரே உள்ள குள்ளச்சாமியை ஏனையோர் போலக் காணுமல் அவன் உண்மை நிலையை, அதாவது எல்லாம் கடந்து நிற்கும் சித்தன் என்பதை பாரதி கண்டு கொண்டான்.

இருந்த இடத்திலிருந்து இறங்கி வந்த கவிஞன் குள்ளச்சாமி கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். குள்ளச்சாமி திமிறிக் கொண்டு அவ்விட்டின் பின் புறம் ஓடிவிட்டான். வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் கிடைக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை பாரதி விட்டுவிட விரும்பவில்லை. அவன் பின்னே ஒடிச் சென்று கொல்லையில் அவனை மறித்துக் கொண்டான். தனக்கு ஏதாவது உபதேசம் செய்ய வேண்டுமென்று கேட்டான் கவிஞன். வானவன் போல் நின்ற குள்ளச்சாமி வாய் பேசாமல் எதிரே நின்ற இடிந்த குட்டிச் சுவரை விரலால் காட்டி அதே விரலால் சூரியனைக் காட்டி, அதே விரலால் கிணற்று நீருக்குள் தோன்றும் சூரியனுடைய பிரதிபலித்த பிம்பத்தையும் காட்டி இதனை நீ புரிந்து கொண்டாயோ எனக் கேட்டான். கவிஞன் அறிந்தேன் எனக் கூறியவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்த ஞானி சென்று விட்டான். தான் அறிந்து கொண்ட உண்மையை பரம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/221&oldid=659935" இலிருந்து மீள்விக்கப்பட்டது