பக்கம்:புதிய கோணம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - சித்தன் 217

இன்று புதிதாகப் பிறந்தோ மென்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி யின்புற்றிருந்து வாழ்வீர்; அஃதின்றிச் சென்றதையே மீட்டு மீட்டும் மேன்மேலு நினைந்தழுதல் வேண்டா, அந்தோ! மேதை யில்லா மானுடரே-”

(பாரதி-66)

ஆம்! சின்னசாமி ஐயர் மகன் சி. சுப்பிரமணிய பாரதியாக புதுவைக்குள், அவன் வழிபடும் சக்தியின் அருள் அழைத்து வந்தது. இப்பொழுதும் அவன் இன்னும் சி. சுப்பிரமணிய பாரதி என்று தான் அழைக்கப்பட்டான். ஆனால் இப்பொழுதுள்ள ‘சி’ என்ற எழுத்திற்கு பொருள் வேறு. இங்கு வரும்பொழுது சின்னசாமி என்பதன் சுருக்கமாக இருந்த ‘சி என்ற எழுத்து இப்பொழுது சித்தன்’ என்ற பொருளைத் தாங்கி நிற்கத் தொடங்கிற்று.

புதுவைக்கு வந்த சின்னசாமி சுப்பிரமணிய பாரதி சித்தன் சுப்பிரமணிய பாரதியாக மாற்றப்

பட் விட்டான். அதனால் தான் “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும், பராசக்தி!” என்று பராசக்தியிடம் வரங்கேட்கின்ற அளவிற்கு உயர்ந்து விடுகின்றான். இந்த

மாற்றத்திற்குப் பிறகு அவன் மனம் பெரும்பாலும் எங்கோ லயித்து விட்டிருந்தது. அதுவரை உடலை வாட்டிய பசியும், தாகமும் இப்பொழுது அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/225&oldid=659939" இலிருந்து மீள்விக்கப்பட்டது