பக்கம்:புதிய கோணம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இராயப்பேட்டை முனிவர்

இராயப்பேட்டை சென்னையில் ஒரு பகுதி ஆகும். சென்னை போன்ற பெரிய நகரங்களில் எப்படி முனிவர்கள் வாழ முடியும்? முனிவர்கள் என்று கூறினவுடன் நீண்ட சடை முடியையும், காவி உடையையும், தண்டு கமண்டலங்களையும் நினைந்து கொள்வதுதான் மனித இயற்கை நம்மைப் பொறுத்த வரை முனிவர்கள் இப்படித்தான் நம் மனத்திரையில் தோன்றுகிறார்கள். ஏன்? நம் தமிழ்ப்பட வெள்ளித் திரையிலும் இப்படித்தான் தோன்றுகிறார்கள். உண்மையில் முனிவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.

காவி உடையும், தாடி மீசையுமே தவக்கோலம் என்றால் தமிழ் நாட்டில் இவர்கட்குப் பஞ்சமே இல்லை. இக்கோலம் எதனை அறிவுறுத்துகிறது? பற்று அற்றவர்கள் இவ்வுடை உடுத்தியவர்கள் என்பதனைப் பிறர் அறியச் செய்கிறது. உண்மையில் பற்று அற்றவர்களா இவர்கள்? வயிற்றுக்கு இல்லா மலும், உடல் உழைத்துப் பொருள் தேட இயலாமலும் எளிதான முறையில் வாழப் புகுந்தவர்கள் இவர்கள். இப்போலித் துற்விகளால் தமிழ்நாடு பெற்ற அவப்பெயர் கொஞ்ச நஞ்சமன்று. வேதநாயகம் பிள்ளை கூறியபடி ஒரு பெண் வேண்டாமென்று கொள்வோம் சந்நியாசம், ஊரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/227&oldid=659941" இலிருந்து மீள்விக்கப்பட்டது