பக்கம்:புதிய கோணம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புதிய கோணம்

உள்ள பெண்கள் மீதெல்லாம் நேசம் என்று வாழும் இப்போலித் துறவிகட்குத் தமிழ்நாட்டில் பஞ்ச மில்லை. தமிழர்கள் காவி உடையைக் கண்டு விட்டால் தரும் மதிப்புக்கும் பஞ்சமில்லை.

இத்தகைய போலித் துறவிகளைக் கண்டால் வெறுப்பவர் ஒருவர் நம் காலத்தில் வாழ்ந்தவர். அவர் கர்வியுடை கட்டுபவரல்லர். வெள்ளைக் கதராடை கட்டுபவர். வீட்டையும் பொறுப்பையும் விட்டுவிட்டதாகப் பறைசாற்றிக் கொண்டு பெறும் நிலையங்களை வைத்து ஆள்பவர் கூட்டத்தில் சேர்ந்தவர் அல்லர் அவர் காட்டுக்கு ஓடிக் கனசடை வைத்து, மூக்கைப் பிடித்து மோட்சம் போக வழி தேடுபவரல்லர் இவர். அதனால் கடவுள் நம்பிக்கையே இல்லாதவரோ என்று கருதிவிட வேண்டாம். நிறைந்த தெய்வபக்தி உடையவர். பக்தியைக் காட்டிலும் நல்லொழுக்கத்தை உயிரினும் ஓம்பிப் பாதுகாத்தவர். பிறர் மனம் நோவும்படி பேசாத மென்மையாளர். இத்தகைய ஒரு துறவியை நீண்ட காலம் தன்பால் வைத்துப் போற்றியது இந்த இராயப்பேட்டை நகரம். -

நண்பர்கள் பலர் அவரைச் சாது முதலியார் என்று அழைத்தனர். வேதாந்தகேசரி வடிவேல் செட்டியார் இராயப்பேட்டை முனிவர் என்று அழைத்தார் அவரை. அவர் தாம் திரு. வி. கலியான சுந்தர முதலியார். திரு.வி.க என்று கூறினாலே தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/228&oldid=659942" இலிருந்து மீள்விக்கப்பட்டது