பக்கம்:புதிய கோணம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராயப்பேட்டை முனிவர் 223

கிருஷ்ணமூர்த்தி ஆவார்; தமிழில் உரைநடை இருபதாம் நூற்றாண்டில்தான் நன்முறையில் வளரலாயிற்று. அவ்வளர்ச்சியின் ஆணிவேராய் விளங்கியவர் சாது முதலியார்.

முப்பது நாற்பது ஆண்டுகட்கு முன்னர் சைவ சித்தாந்த சபை, வைணவ சபை, நபிகள் நாயகத்தின் விழா, கிறிஸ்துவர் கூட்டம், சைனர் சமயக் கூட்டம், புத்தர் பிறந்த நாள் விழா ஆகிய இத்தனையிலும் திருநீற்றைப் பூசிய நெற்றியுடனும், மெல்லிய உடம் புடனும், உச்சிக் குடுமியுடனும் ஒருவர் சென்று கலந்து கொள்வதைப் பலர் கண்டிருக்கலாம். இடக் கையை உயர்த்திச் சுண்டுவிரலை மட்டும் நீட்டிக் கொண்டு வைணவ சபையில் ஞானசம்பந்தர் பாடலையும், சைவ சித்தாந்த சபையில் சைனக் கொள்கையையும், சைனர் கூட்டங்களில் திருநாவுக் கரசர் தேவாரத்தையும் மேற்கோள்காட்டி, அவரவர் களும் வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும் முறையில் பேசி மீளும் இயல்புடையவர் திரு.வி.க. ஒருவரே.

இத்தனை மாறுபாடுடைய கொள்கைகளிலும் ஒருவர் புகுந்து புறப்பட வேண்டுமாயின் அவர் ஒப்பற்ற சமரச ஞானியாகவே இருத்தல் வேண்டும். இறைவனின் அருளாலேயே அத்துணைச் சமயங் களும் தோன்றி நிலைத்துள்ளன என்றும், இவை ஒவ்வொன்றிலும் பல உண்மைகள் உள்ளன என்றும், இவை அனைத்துமே இறைவனிடம் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/231&oldid=659947" இலிருந்து மீள்விக்கப்பட்டது