பக்கம்:புதிய கோணம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராயப்பேட்டை முனிவர் 225

செயல்களைச் செய்வதைக் காணலாம். அதேபோன்று இரத்தத்தைக் கண்டு மயக்கமடையும் திரு.வி.க. ‘சூளை நெசவாலைப் போராட்டத்தில் பன்முறை துப்பாக்கிகளின் எதிரே நடந்து சென்றார்.

அவரைச் சுற்றிலும் மக்கள் அடிபடுகிறார்கள். குண்டு மழை பொழிகிறது. குண்டு மழையின் நடுவே தாயுள்ளம் படைத்த தொழிலாளர் தந்தை திரு.வி.க. தலைமை ஏற்றுப் பணிபுரிகிறார். குண்டு ஒருபுறம் இருக்க, தடியடி வேறு. ஓர் அடிக்கும் தாங்காத பெண்ணியல்பு கொண்ட சாது முதலியாருக்கு இத்துணை வீரம் எங்கிருந்து வந்தது; அது வியப்பே.

துன்பத்தை எதிர்த்துப் போராடும் வீரம் உடலில் தோன்றுவதன்று; மனத்தே தோன்றுவதாகும். அவ்விரத்தை நிறைந்த அளவு பெற்றிருந்தார் திருவி.க. சென்னைப் பெரம்பூரிலுள்ள தொழிற் சங்கத்தின் தந்தையும் தாயும் ஆன இவருடன் பலகாலும் அங்குச் சென்றுள்ளேன்.

தொழிலாளர் முன்னேற்றத்திற்காகத் திருவிக அரும்பாடுபட்டார். நாடு கடத்தப்படும் அளவுக்குத் திரு.வி.க. அந்நாளைய ஆட்சியாளருக்கு அச்சத்தை உண்டாக்கினார். இதில் மற்றொரு வியப்பும் உண்டு. தொழிலாளர் கூட்டங்களில் பேசும் திரு.வி.க.வுக்கும் சைவ சித்தாந்த சபையில் பேசும் திரு.வி.க.வுக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. இரண்டு கூட்டங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/233&oldid=659949" இலிருந்து மீள்விக்கப்பட்டது