பக்கம்:புதிய கோணம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராயப்பேட்டை முனிவர் 229

அவர்கள் முன்னேற்ற வழிகட்கு வாழ்த்துக் கூறி, அவர்கள்பால் உள்ள குறைகளையும் எடுத்துக் காட்டி, நன்முறையில் சீர்திருத்தி வளர வழி வகுத்த பெருமை திருவிகவையே சாரும்.

“பெரிய புராணத்துக்குக் குறிப்புரை” எழுதிய பெரியார் “திருக்குறள் பாயிரத்துக்கு’ விரிவுரை எழுதினார். “பெண்ணின் பெருமை” எழுதிய பெரியார் “இராமலிங்கர் திருவுள்ளம் எழுதினார். “சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து” எழுதிய

அவரே “முடியா: காதலா?’ என்ற நூலையும் எழுதினார். “அருகன் அருள் வேட்டல், “ஏசுவின் அருள் வேட்டல்”, “திருமால் அருள் வேட்டல்'’, “பொதுமை விருந்து’’ முதலிய நூல்கள்

அனைத்தும் எழுதிய ஞானியின் பேனாவிலிருந்து தான் ‘இந்தியாவும் விடுதலையும்'என்னும் அரசியல் வரலாற்று நூல் தோன்றிற்று. ஏன்? அதே பேனாவில் இருந்துதான் “மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்” என்ற ஒப்புயர்வற்ற நூல் பிறந்தது.

ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இத்துணை நூல்கள் சிறந்த முறையில் எழுத முடிந்ததாயின் அவருடைய பரந்து பட்ட அனுபவத்திற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை அன்றோ?

தமிழ்நாடு என்றுமே பெண்கட்கு மதிப்புக் கொடுத்து வந்துள்ளது. “முத்திக்கு நாயகி பெண் பிள்ளை” என்று பாடிச் சென்றார் திருமூலர். அத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/237&oldid=659953" இலிருந்து மீள்விக்கப்பட்டது