பக்கம்:புதிய கோணம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கலையும் கலைஞனும்

கலைகள் பலதரப்படும். அவற்றைச் சாதாரணக் கலைகள் என்றும், நுண்கலைகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். கட்டிடம், சிற்பம், ஒவியம், இசை, கவிதை ஆகியவை நுண்கலைகள் என்றும், பிற சாதாரணக் கலைகள் என்றும் வழங்கும், கலை யாவது யாது? மனித மனத்தில் தோன்றும் சிறந்த ஒர் உணர்ச்சிப் பெருக்குக்கு ஒருவன் வடிவு கொடுக்கக் கூடுமேயானால், அது எத்தகைய வடிவாக இருப்பினும் கலை என்ற பெயரைப் பெறும். கட்டிடம், சிற்பம், ஒவியம், இசை, கவிதை ஆகிய எந்தத் துறையைச் சேர்ந்திருப்பினும் அது நுண்கலை என்றே பெயர் பெறும். காலையில் கடல் முகட்டில் கதிரவன் தோன்றும்போது ஒப்பற்ற அழகைப் பொழிந்துகொண்டு வெளிவருகிறான் எனினும், காண்போர் உள்ளத்தை அவ்வழகு பற்றி ஈர்க்கிறது எனினும், இயற்கையின் இந்தக் கோலத்தை யாரும் கலை என்று சொல்வதில்லை. ஆனால், இத்தகைய ஒரு காட்சியை ஒர் ஒவியனோ அன்றிக் கவிஞனோ கண்டு, பின்னர் அதனை ஒவியமாகவோ கவிதையாகவோ படைப்பானே ஆனால் அதனைக் க்லை என்று சொல்கிறோம். எனவே கலை மனிதனால் படைக்கப்படுவது என்பதை அறிய முடிகிறது. படைக்கும் ஆற்றல் உள்ள மனிதனைக் கலைஞன் என்று கூறுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/241&oldid=659959" இலிருந்து மீள்விக்கப்பட்டது