பக்கம்:புதிய கோணம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைஞனும் 235

‘கலை வாழ்க என்று வாழ்த்தும்பொழுது கலை என்ற பொருள் ஏதோ தானே தோன்றி வளர்வது போலவும் நம்முடைய ஆர்வம் ஒன்றினாலேயே அதனை வளர்த்து விடலாமென்று நினைப்பது போலவும் தெரிகிறது. ஆழ்ந்து நோக்குமிடத்து அதிதி) இt) வாழ்வதும் வளருவதும் கலைஞனின் வாழ்வையும் வளர்ச்சியையும் பொறுத்தே இருக்கிறது என்பதை நம்மில் பலரும் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. மாமல்லபுரம் போன்ற சிற்பங்களும், சிற்றன்னவாசல் போன்ற ஒவியங்களும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் போன்ற கட்டிடக் கலையும், அரங்கேற்றுக் காதையில் கூறப்பெற்றுள்ளது போன்ற இசைக்கலையும், சங்க இலக்கியம் போன்ற இலக்கியக்கலையும் இந் நாட்டிடைத் தோன்றின, வளர்ந்தன என்றால், இவற்றின் ஆணி வேராக அமைந்திருந்த கலைஞர்களை நாம் மறத்தல் கூடாது.

உலகம் கண்டு வியக்கும் இவ்வருங்கலைகள், இக்கையகலத் தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்து இன்றும் நின்று நிலவுகின்றன என்றால், இந்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த கலைஞர்களின் உள்ளத்தில் முதன்முதல் முகிழ்த்துப் பின்னர் அவர் களுடைய கைவண்ணம், நாவண்ணம் ஆகியவற்றின் உதவியால்தானே இவை படைக்கப் பெற்றன? படைத்த அவர்கள் இன்றில்லை, என்றாலும் அவர்கள் கற்பனைக்கு வடிவு தந்தமையால் வெளிப்பட்டு நிற்கும் இக்கலைகளைக் கண்டு வியக்கும் போது பூமிக்கடியில் புதைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/243&oldid=659961" இலிருந்து மீள்விக்கப்பட்டது