பக்கம்:புதிய கோணம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதானக் கலை 241

உள்ள நீயூரான்கள் அதனைப் பதிவு செய்து கொள்ள முடியும்,

ஒரு சொல்லைக் கேட்டு, அது நியூரான்களில் பதிவு செய்யப்பெற வேண்டுமேயானால், அதற்குரிய கால அளவு இடைவெளி ஒவ்வொரு மனிதருக்குமே வேறுபடும். அலைபாயும் மனம் உடையவர்கள் இரு முறை மும்முறிை கேட்டாலும் அது நியூரான்களைச் சென்று தாக்குவதுமில்லை. எனவே பதியப் பெறுவதும் இல்லை.

இதன் மறுதலையாக, மனத்தை ஒருமுகப் படுத்தப்பழகி, அடுத்து ஒரு நிலையில் அதனை நிறுத்தப் பழக்கிவிட்டால் மேலே சொன்ன காரியம் எளிதில் நடைபெறும். இந்நிலையில் ஒரு சொல்லைக் கேட்டால் ஒரு விநாடியின் நூற்றிலொரு கூறு காலப்பகுதியில், சில ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு கூறு காலப்பகுதியில் நியூரான்களின் பதிவுச் செயல் நடைபெற்றுவிடும். மனித மூளையின் இடப் பகுதிதான் கணிதம், அறிவியல், ஆகியவற்றிற்கு நிலைக்களன் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

எந்த ஒரு மனிதனுக்கும், மூளைப் பிராந்தியத்தில் பலப் பல லட்சக்கணக்கான நியூரான்கள் உள்ளன. அவை தொழிற்படும் வேகத்தைப் பயிற்சியினால் வளர்த்துக் கொள்ள முடியும் சாதாரண மனிதர்கள் இவற்றைப் பயன்படுத்துவதே இல்லை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/249&oldid=659968" இலிருந்து மீள்விக்கப்பட்டது