பக்கம்:புதிய கோணம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதானக் கலை 243

எஞ்சிய எட்டும் முன்னர்க் குறிப்பிடப்பெற்ற மனம் ஒருமுகப்பட்ட நிலைப்பாட்டில் நடைபெறுவனவே ஆகும்.

உதாரணமாக ஒருவர் நீண்டதோர் பெருக்கல், அன்றி கூட்டலில் ஏதோ ஒரு எண்ணைக் குறிப்பிடு கின்றார். அடுத்தவர் நீண்டதொரு தொடரின் 27ஆம் எழுத்து இன்னது என்பார். மூன்றாமவர் ஈற்றடி தந்து வெண்பா ஒன்றை இயற்றச்சொல்வார். பிறிதொருவர் ஒரு மணியைக் கையில் கொண்டு தான் விரும்பும் பொழுதெல்லாம் ஒலிக்கச் செய்வார். அடுத்து ஒருவர் அவதானியின் முதுகில் நெல் அன்றி சிறு கல் தொடர்ந்து எறிவார்.

முதலாவதாக வினா தொடுத்தவர், பெருக்கல் அன்றி கூட்டல் என்று சொல்லி ஆறு இலக்க எண் ஒன்றில் மூன்றாம் இலக்கம் இன்னது என்று குறிப்பிடுகிறார். கேட்கும் அவதானி கூட்டல் என்ற சொல் கேட்ட அளவில் அவர் மனத்தில் வாங்கிய உடன் நியூரான்கள் தொழிற்படத் தொடங்குகின்றன.

ஆறு இலக்க எண், அதில் 3ஆம் இலக்கம் இது என்று அறிந்த அளவில், நியூரான்கள் ஒரு வரை படத்தையே மூளைக்குள் தயாரித்து விடுகின்றன. ஆறு இலக்க எண் இன்னதுதான் என்று குறிப் பிடாமல் ஆறு இலக்கம் என்பதனை மட்டும் நியூரான்கள் பதிவு செய்கின்றன. மூன்றாம் இலக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/251&oldid=659971" இலிருந்து மீள்விக்கப்பட்டது