பக்கம்:புதிய கோணம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புதிய கோணம்

இதுதான் என்னும்போது அவ்வரைபடத்தில் மூன்றாம் இலக்கத்தைப் பதிக்கின்றன.

அவதானி இச்செயலைச் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் 4 அல்லது 5 விநாடிகள் ஆகலாம். அவதானியைச் சோதிப்பவர் (எதிரில் இருப்பவர்) ஆறிலக்க எண் என்றும், அதில் 3ஆம் இலக்கம் இது என்றும் குறிப்பிட்டுச் சொல்ல எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமானதே.

அவதானியைப் பொறுத்தவரை அந்த ஒரு வினா விடைக்கு அவருடைய நியூரான்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு விநாடியில் 100ல் 1 பாகம் தான். இதனை ஆங்கிலத்தில் Split Second 6T6&ssp. கூறுவர். ஒரு விநாடியில் நூற்றில் ஒரு கூறு நேரத்தில் நடைபெறுகின்ற ஒரு காரியம் நிலைபேறு உடையதாகுமா என்பது நியாயமான வினாவே ஆகும். நம்மைப் பொறுத்தவரை இது இயலாத காரியம். காரணம் நம் மனம் அலையும் தன்மை

உடையது.

தியானம் செய்கின்றவர்கள், மெஸ்மரிஸம், ஹிப் நாடிசம் பயில்பவர்கள், அவதானம் செய்கின்றவர்கள் ஆகிய இவர்கட்கு இது எளிதில் இயல்வதே ஆகும். மனத்தை அலையவிடாமல் ஒருமுகப்படுத்துவது முதல் பணி. ஒருமுகப் படுத்திய பின்னர்சுட எந்த ஒன்றில் ஒருமுகப் படுத்தப்பட்டதோ அதிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/252&oldid=659973" இலிருந்து மீள்விக்கப்பட்டது