பக்கம்:புதிய கோணம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 புதிய கோணம்

கற்களின் எண்ணிக்கை, கொடுத்த தொடரின் எழுத்துக்களைக் கவனித்தல் முதலியன ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவற்றில் அவதானியினுடைய புறமனம் ஈடுபடுகிறது.

நாம் புத்தகத்தைப் படிக்கும் பொழுது எழுத்தெழுத்தாகவோ, சொல் பின் சொல்லாகவோ படிப்பதில்லை. படிக்கப் பழகும் குழந்தை அப் பருவத்தில் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி ஒவ்வொரு பதமாகச் சொல்லப் பழகுகின்றது. அதே செயல்தான் இப்பொழுது நடைபெறுகின்றது. தொடரின் 27ஆம் எழுத்து என்று சொல்லும் பொழுது மூளையில் உள்ள நியூரான்கள் 26 காலி இடங்களை இட்டு ஒரு வரை பட0த்தைத் தயாரித்துவிடுகிறது. அத்தொடரின் 40ஆம் எழுத்து இன்னது என்றவுடன் பதிந்த 27 ஆம் எழுத்துக்கு அடுத்து 39 வரை காலி இடங்களை அமைத்து 40 ஆம் இடத்து எழுத்துப் பதிவு செய்கிறது.

இப்பொழுது மீண்டும் நமக்கு ஒர் ஐயம் எழுகின்றது. பல்வேறு செயல்கள் நடைபெறுகின்ற பொழுது 3ஆம் சுற்று கழித்து ஒன்றை எடுத்துச் சொல்வதை எப்படி மறவாமல் மனத்தில் பதித்துக் கொள்ள முடியும் என்ற வினா எழுவதிலும் நியாயம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/254&oldid=659975" இலிருந்து மீள்விக்கப்பட்டது