பக்கம்:புதிய கோணம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதானக் கலை 249

பாடலையும் கூறும் திறமையைச் சோதிக்க நேரிட்டது.

வாய்பாடுகளை மனப்பாடம் செய்வது போலவே இத்தகைய பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவர்கள் நன்கு மனப்பாடம் செய்திருந்தனர். சோதனையில் பல குழந்தைகள் அழகாகச் செய்தது வியப்பில் ஆழ்த்தியது.

எனவே நினைவில் பதிக்கப்பட்ட ஒன்றினை தேவை ஏற்படும்பொழுது மனத்தை ஒருமுகப்படுத்தி மீட்க முடியும் என்பதற்கு இம்மழலைகளே சான்றாக விளங்கின. இந்நினைவாற்றல் மிக்க கவனத்தோடு வளர்க்கப் பெற்று, அவதானம் செய்யப்பயன்படுவது உண்மையே எனினும் வெற்று நினைவாற்றல் மட்டும் அவதானம் செய்யப் பயன்படாது.

பழைய நிகழ்ச்சியையோ, பாடலையோ மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருவது என்பது வேறு. புதியதாக அந்த வினாடியிலேயே அவ்விடத்திலேயே விட்டு விட்டுச் சொல்லப்படுகின்ற எண்களையோ, எழுத்துக்களையோ, நேரிடையாக அப்படி அப்படியே நினைவுப் பகுதிக்கு அனுப்பிப் பதித்து விடுவதால் எவ்விதப் பயனும் ஏற்படாது.

அதன் மறுதலையாக எழுத்துக்கள் முழுவதும் சொல்லப்பட்ட பிறகு நியூரான்கள் தயாரித்த வரை படத்தில் அந்த வாக்கியம் முழுவதுமாக நிரம்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/257&oldid=659978" இலிருந்து மீள்விக்கப்பட்டது