பக்கம்:புதிய கோணம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 புதிய கோணம்

பிறகு நினைவுப் பகுதிக்குக் கொண்டு செல்லப் படுகின்றன. அப்படி இல்லையானால் இடை இடையே அனைத்து எழுத்துக்களும் கூறப்பெற்ற உடனேயே அவ்வாக்கியத்தை ஒப்பிக்க நேரிடும்.

அவதானிகள் அவ்வாறு செய்வதில்லை. இவ்வாறுதான் கணக்கு முதலியனவும் அவை அவை செய்து முடிக்கப் பெற்ற பின்னர் நினைவுப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவதானம் முடிகின்ற நிலை அமைந்த பின்னர் விடைகள் வரிசையாகச் சொல்லப் பெறுகின்றன.

வியப்பைத் தருகின்ற இக்கலையை வெறும் பயிற்சியால் மட்டும் ஒருவர் பெற்றுவிட முடியாது. இவ்வாறாய திறமை இயல்பாகவே ஒருவரிடத்து அமைந்திருப்பின் அவர் அதனை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர முழுவதும் கற்றுக் கொண்டு செய்யப்படுகின்ற கலை அன்று இது. அவதானத்தைப் பற்றிச் சிந்திக்கையில் அஷ்டாவதானமோ, தசாவதானமோ குறிப்பிட்ட எட்டு அன்றி பத்து நிகழ்ச்சிகள் இவைதாம் செய்யப்படுகின்றன என்று கூறுவதற்கில்லை. -

இலாடச் சங்கிலி கழற்றல், வாய் ஒயாது இறைவன் திருப்பெயர்த் தொடர்களை அவதான நிகழ்ச்சிகளின் இடைவேளைகளில் நவிலல், தம் முதுகில் எறியப்பெறும் கல் அன்றி நெல் இத்துணை என என்று கணக்கிட்டுக் கூறுதல் என்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/258&oldid=659979" இலிருந்து மீள்விக்கப்பட்டது