பக்கம்:புதிய கோணம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதானக் கலை 251

பொதுவானவை. ஒவ்வொரு அவதானியும் மேற் குறிப்பிட்டன போக எஞ்சியவற்றுள் தமக்கெனத் தாமே தேர்ந்தெடுத்துப் பயில்வன சிலவற்றை மேற் கொள்ளல் கூடும். இவை ஒருவர்க்கொருவர் மாறு படவும் செய்வன.

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வினா தொடுத்த ஒருவர் பின் வருமாறு கேட்டார்.

சங்கப் பாடல்களுள் அகத்திணையில் ஒரு துறையைக் கூறி அத்துறையில் குறிப்பிட்ட ஒரு புலவர் இயற்றிய பாடல் யாது? அப்பாடல் கருத்துடன் ஒத்து இயையும் பிற்காலத்துத் தோன்றிய கோவைப் பாடலை கூறுக என்று கேட்டார்.

அவர் வியக்கும் முறையில் திரு. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் விடை தந்தார் என்று அறிகிறோம். மேலும் அவதானத்தில் அப்பாடலுக்கு விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது. இலக்கிய அவதானமே அன்றி, தொல்காப்பியம் போன்ற தொல்பழங்கால இலக்கண நூல்களினின்றும் சபையோர் வினா எழுப்ப அவ்வினாவிற்கு விடை தரும் வகையில் ஆய்வுரை நிகழ்த்தினார் என்றும் அறிகிறோம்.

இவ்வாறாக அவதானங்கள் புதுமையானது .

மட்டுமன்று; பிறரால் ஆற்றற்கு அரியதும் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/259&oldid=659980" இலிருந்து மீள்விக்கப்பட்டது