பக்கம்:புதிய கோணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கொப்பரைத் தேங்காய்

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ என்று ‘மணிமேகலையில் போற்றப்பெறும் புத்ததேவன் கபிலவாஸ்துவில் அரசன் மகனாய்த் தோன்றியவன். அற்றை நாளில் அரசுச் செல்வத்தில் பிறப்பதைக் காட்டிலும் சிறந்த பேறு வேறு இல்லை. மேலும் மனத்துக்கிசைந்த மங்கை நல்லாள் ஒருத்தியை மணந்து அருமை மைந்தன் ஒருவனையும் பெற்று வாழத் தொடங்குகையில் பெற வேண்டிய இன்பம் அனைத்தையும் பெற்றுவிட்டதாகவே கருதலாம்.

மகனுடைய பிற்கால வாழ்வு ஏனையோர்போல அமையாது என்பதை அறிந்த அரசன் சுத்தோதனன், துன்பம் அல்லது துயரம் என்று கூறத்தக்கவை எவையும் அவன் கண்னெதிர் வரவொட்டாமற் செய்துவிட்டான். அவ்வாறு இன்பத்தில் பிறந்து, இன்பத்தில் வளர்ந்து, இன்பத்தையே கண்டு பழகிய ஒரு பெருமகன் வாழ்வில் முயன்று கண்ட உண்மைகள் யாவை ?

துக்கம், துக்க உற்பத்தி, துக்க நிவாரணம்; துக்க நிவாரண மார்க்கம் என்பவை அல்லவோ இன்பத்தில் மிதந்த பெருமகன் கண்ட உண்மைகள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/27&oldid=659987" இலிருந்து மீள்விக்கப்பட்டது