பக்கம்:புதிய கோணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொப்பரைத் தேங்காய் 21

ஒன்றும் செய்வதில்லை. “ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்த பொழுது அவர் துயரமடையவில்லை. ஆனால், சிறு முள் என் காலிற் குத்தினால் ஏன் துன்ப முண்டாகிறது?’ என இராமகிருஷ்ண பரமஹம்ஸரை ஒருவன் வினாவிய பொழுது, அவர் அழகாக விடை கூறினார். ஏசுநாதர் கொப்பரைத் தேங்காய்; நீ இளந் தேங்காய்! அது தான் வேறுபாடு’ என்றார் அப்பெரியவர் !

இளந் தேங்காயில் பருப்புடன் ஒடும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஒட்டில் ஆணி அடித்தால் பருப்பிலும் சென்று தைக்கிறது. ஆனால், கொப்பரைக் காயில் ஒட்டினுள் பருப்பு இருப்பினும் இரண்டிற்கும் சம்பந்தமில்லை. ஒட்டில் ஆணி அடித்தாலும் பருப்பில் படுவதில்லை. அதே போன்று பெரியவர்களும் இவ்வுடலுடன் வாழ்ந்தாலும் உடலைப்பற்றிய சுகதுக்கங்கள் அவர்கள் மனத்தையோ ஆன்மாவையோ பற்றுவதில்லை. உடலுடன் வாழ்ந்தாலும் ஒட்டாமல் வாழும் வாழ்வே இவர்களுடைய வாழ்வு. நம்போன்ற மனிதர்கள் உடலுடன் சேர்ந்தே (ஒட்டியே) வாழ்கிறோமாகலின் உடலைப் பற்றியன அனைத்தும் நம் உள்ளத்தையும் உயிரையும் பற்றுகின்றன. பெரியோர்கள் கொப்பரைத் தேங்காய் போன்றவர்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/29&oldid=659990" இலிருந்து மீள்விக்கப்பட்டது