பக்கம்:புதிய கோணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொப்பரைத் தேங்காய், 27

என்று வள்ளுவர் கூறுவது எதனை? இவை அனைத்தும் ஒன்றே. பிறர்க்கு அறத்தை முயன்று செய்தலும், பிறர் பாவத்தைப் போக்கத் தன்னரிய திருமேனி சதைப்புண்ண இரட்சண்ய யாத்திரிகம்) செய்தலும், பிறர் பழியைத் தம் பழிபோல் நாணுதலும் ஒன்றே பெயரால் இவை வேறுபடினும் கருத்தால் ஒன்றே.

சித்தார்த்தன் என்ற மனிதன் கெளதம புத்தன் என்ற தேவனாக மாறிய ரசவாதத்தை செய்தது யாது? பிறர்க்கு அறம் முயன்ற பெற்றியே அந்த ‘ரசவாதம்’. அதன் விரிவைத்தான் அடுத்துவரும் அடிகள் விளக்கிக் கூறுகின்றன. துறக்கம் வேண்டாத தொன்மை மீட்டும் அவன் அகங்கார மமகாரங் களை வென்ற அளவையே குறிக்கின்றன. மாரனை வென்று தீநெறிக் கடும்பகை கடிந்தவனுக்கு உரிமையால் கிடைப்பது துறக்கம் என்னும் நிலை. இவை இரண்டையும் இந்த உலகில் செய்தவர்கள் பெறும் பேறாகிய துறக்கம் அல்லது மோகூத்தைப் பெற்றுக்கொண்டு அமைந்துவிடும் மனிதர் பலரைப் போல் அல்லாமல் சித்தார்த்தன் புத்தனாக மாறிப் பிறர்க்கு அறம் முயன்ற வரலாற்றை, கண் பிறர்க்கு அளிக்கும் கண்னோன்; நரகர் துயர்கெட நடப்போன்; உரகர் துயரம் ஒழிப்போன் என்பன போன்ற அடிகள் விளக்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/35&oldid=659997" இலிருந்து மீள்விக்கப்பட்டது