பக்கம்:புதிய கோணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புதிய கோணம்

மாரனை வென்ற வீரனாகமட்டும் இருக்கும் ஒருவனை, தீநெறிக் கடும்பகை கடிந்தவனைக்கூட வாழ்த்தலாம்; பெருமைப்படப் பாராட்டிப் பேசலாம். ஆனால், இவற்றினும் மேம்பட்டுப் பிறர்க்கு அறம் முயலும் பெரியவனை வணங்குவது தவிர வேறு வழி இல்லை. மனிதன் கொப்பரைத் தேங்காய் நிலையை அடைய வேண்டுமாயின் அதற்குரிய வழி யாது? அகங்கார மமகாரங்களை அறவே நீக்குதலாம். ஆனால், அதனின்றும் மேம்பட்ட நிலையை அடைய வேண்டுமானால் பிறர்க்கு அறம் முயல வேண்டும்.

புத்ததேவன் கூறிய துக்கத்தை அதற்கு முன்னரும் பின்னரும் கூறியவர்கள், கண்டவர்கள், அறிந்தவர்கள், தங்கள் அளவில் போக்கிக் கொண்டவர்கள் பலருண்டு. அடுத்து துக்க உற்பத்தி பற்றியும் பலரும் அறிந்திருந்தனர். துக்கத்தின் உற்பத்தி ஆசையே என்பதை, -

ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள், ஆசைப்படப்பட ஆய்வருந் துன்பங்கள்” (திருமந்: 2574)

என்பது போன்ற திருமூலர் திருமந்திர வாக்கும்;

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து (குறள் 361)

என்றும்,

‘அவா இல்லார்க்கு இல்லாகுந் துன்பம் (குறள் 368)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/36&oldid=659999" இலிருந்து மீள்விக்கப்பட்டது