பக்கம்:புதிய கோணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதிய கோணம்

கொப்பரைத் தேங்காயாக மனிதன் ஆவதுதான் யான், எனது என்னும் செருக்கை அறுத்த நிலை ஆனால், கொப்பரைத் தேங்காய் செக்கில் அகப்பட்டுத் தான் வெந்து, சுருங்கி, நைந்து, எண்ணெயாக மாறிப் பிறர்க்குப் பயன்படுவதுதான் புத்தனாகும் நிலை. ஆதலால்தான் புத்தன் கூறிய உண்மைகளைப் பிறருங்கூறி இருப்பவும், அப் பிறர்பற்றி இவ்வுலகம் கவலை கொள்ளாமல் புத்தனைப் பின்பற்ற முனைகிறது.

அரண்மனைப் போகவாழ்வில் உடம்பால் ஈடுபட்டிருப்பினும் புத்ததேவன் மனம் மாரனையும் தீநெறிக் கடும்பகையையும் வெல்ல வழிதேடி அலைந்தது. என்று அருமைமனைவி யசோதரை, அருமந்தபிள்ளை இராகுலன் இருவரையும் விட்டுப் பிரிந்ததோ, அன்றே அவன் மனம் இவை இரண்டிடத்தும் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், போதி மரத்தடியில் ‘சுஜாதை’ என்ற ஆயர்குல மடந்தை தந்த பாற்சோற்றை உண்டு கண்ட உண்மை யாது? பிறர்க்கு அறம் முயலும் பெற்றியேயாகும். பிறர்க்கு அறம் முயலும் பெற்றி உலகில் பரவி, உலகம் வாழ வழி வகுப்பதாக,

இ.இ.இ.இ.இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/38&oldid=660001" இலிருந்து மீள்விக்கப்பட்டது