பக்கம்:புதிய கோணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எங்கே செல்கிறோம்?

‘அகில யுகம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளப்பெறும் இந்த யுகம், இதற்கு முன்னர் முடிந்த யுகங்களையெல்லாம் காட்டிலும் மிகச் சிறப்புடையது என்றும், மிகவும் பெருமையுடையது என்றும், ஈடு இணையற்றது என்றும் சொல்லிக் கொள்கிறோம். உலக வரலாற்றிலேயே இவ்வளவு சிறந்த முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், மருத்துவக் கண்டுபிடிப்புகளும் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது போல் சென்ற பல நூற்றாண்டுகளில் கூட இல்லை என்று பெரும்ை பேசிக்கொள்கிறோம். இவையனைத்தும் உண்மைதர்ன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், அந்தப் பழைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த அதே மனிதகுலம் தான் இன்றும் வாழ்ந்துவருகிறது. அப்பழைய மனிதனைவிட இப்புதிய யுக மனிதர்கள் அறிவிலும், கல்வித் தரத்திலும் மேம்பட்டு உள்ளார்கள் என்பதிலும் ஐயமில்லை.

என்றாலும் என்ன? அந்தப் பழைய மனிதர்கள் பெற்றிருந்த ஒர் அரும்பொருளை, பொன் எனப் போற்றிய ஒரு பொருளை இன்றைய சமுதாயம் இழந்து நிற்கக் காண்கிறோம். செல்வச் செருக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/39&oldid=660002" இலிருந்து மீள்விக்கப்பட்டது