பக்கம்:புதிய கோணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதிய கோணம்

மிகுந்த அமெரிக்காவிலிருந்து வறுமையில் வாடி உழல்கின்ற ஆப்பிரிக்கர்கள் வரை இப்பொருளை இழந்து நிற்கக் காண்கிறோம். எத்தகைய பொருளை இப்புதிய சமுதாயம் இழந்துவிட்டது என்பதை கொஞ்சம் காண்டல் வேண்டும். அன்றைய மனிதன் பெற்றிருந்ததும் இன்றைய மக்கள் இழந்து நிற்பதும் ஆகிய அந்த அரும்பொருள்தான் ‘அமைதி என்பது. இன்றைய சமுதாயத்திலுள்ள இளையவர்-முதியவர், ஆண்-பெண், கற்றார்--கல்லாதார், நாகரிகம் மிகுந்தார்-நாகரிகமற்றார், பொருள் 1ெ6 ம் உடையார்.வறுமையில் வாடுவார் ஆகிய அனை வருக்கும் ஒரு சிறந்த பொதுத்தன்மை இருக்கக் காண்கிறோம். இவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற பொதுத் தன்மையையோ, உலக சமுதாய உறுப்பினர்கள் என்ற பொதுத் தன்மையையோ இங்குக் குறிப்பிடவில்லை. மனத்துக்கண் அமைதி என்பது ஒரு சிறிதும் இல்லாமல் ‘எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் துயரச் சூழலில் சிக்கி உழல்கின்ற ஒன்றைத்தான் பொதுத் தன்மை என்று பேசுகிறோம்.

விஞ்ஞான முன்னேற்றம் என்பது இல்லாத அந்தப் பழைய நாளில் மனிதர்கள் வாழ்க்கை வசதிகளில் குறைந்து இருந்திருக்கலாம். மணிக்கு நான்கு மைல் வேகத்திற்குமேல் போக முடியாதவர் 356YTITs; இருந்திருக்கலாம். விண்ணை முட்டும் மாடமாளிகைகள் கட்டிக்கொள்ளத் தெரியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/40&oldid=660004" இலிருந்து மீள்விக்கப்பட்டது