பக்கம்:புதிய கோணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே செல்கிறோம்? 33

நாணல் குடிசைகளில் வாழ்ந்திருக்கலாம். என்றாலும் என்ன ? குடிசையில் வாழ்ந்து பசி எடுத்தபொழுது வேட்டையாடி வயிறு வளர்த்த அவர்கள் மன அமைதியோடு வாழ்ந்தார்கள் என்பதை மறுக்க இயலாது. வாழ்க்கை வசதிகளும் நாகரிகமும் மிகுதி யாகப் பெற்றுள்ளதன் பயனாக இன்று நாம் அமைதியை இழந்து நிற்கின்றோம். “வானையும் மண்ணையும் பரிசாகப் பெற்றுதான் என்ன பயன்? அந்தப் பேரத்தில் நம்முடைய ஆன்மாவை நாம் இழப்பதனால்’ என்று ஷேக்ஸ்பியர் கூறுவது இங்கே நினைவுக் கூறத்தக்கது.

இம் முன்னேற்றங்களால் பெற்ற பயன் யாது? இந்த முன்னேற்றங்களும் வசதிகளும் கிடைத்து விட்டமையால் மனிதனுடைய உடல் உழைப்பு ஒரளவு குறைந்தது என்னமோ உண்மை. உடல் உழைப்பையும் அதன் lf li.jl II do, ஏற்படுகின்ற களைப்பையும் அதிகம் பெற்றிருந்த பழங்கால மனிதன், அவ்வுழைப்பின் பின்னரும் அமைதியோடு உறங்க முடிந்தது. அந்தப் பழைய மனிதனுக்கும் பகை, போட்டி, பொறாமை என்பவை இருந்தன. ஆனால், அவையனைத்தும் அவனுடைய வாழ்க்கை முழுவதையும் ஆட்கொள்ளாமல் அவனுள் ஒரளவு அடங்கி நின்றதாக அறிகின்றோம். இன்றைய மனிதனைப் பொறுத்தமட்டில் பிற வசதிகளும் வாய்ப்புகளும் வளர்ச்சி அடைந்ததைப் போலவே இந்தப் பொறாமை, போட்டி, சகிப்புத் தன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/41&oldid=660005" இலிருந்து மீள்விக்கப்பட்டது