பக்கம்:புதிய கோணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே செல்கிறோம்? 35

செய்துகொள்கின்ற ஒரு குத்துச் சண்டை வீரன் என்ன நிலையை அடைவான் எதிரியைக் குத்தும் பொழுது மிகச்சிறந்த முறையில் அவனால் குத்த முடியுமே தவிர, எதிரி கொடுக்கின்ற குத்தைத் தாங்குவதற்கு நெஞ்சில் உரமும், கீழே விழுந்து விடாமல் இருக்க காலில் வலுவும் தேவையல்லவா? அவை இல்லாமல் கைகளை மட்டும் வலு உடையவையாக வளர்த்துக் கொண்ட குத்துச் சண்டை வீரனை முழு வளர்ச்சி பெற்றவன் என்று நாம் சொல்ல முடியுமா? அதேபோல் இன்றைய மனிதனும் முழு வளர்ச்சி பெறாமல் ஒரு பக்க வளர்ச்சி உடையவனாகவே அமைந்துவிட்டான். அறிவு, உணர்வு என்ற இரண்டின் துணை கொண்டே மனிதன் வாழ்கின்றான். மூளையைப் பற்றி நிற்கின்ற அறிவும், நெஞ்சத்தைப்பற்றி இருக்கின்ற உணர்வும் நன்கு வளர்ந்தால்தான் அவனை முழு மனிதன் என்று சொல்ல முடியும், விஞ்ஞானப் புதுமைகளைக் கண்டு அதனிடையே வாழ்கின்ற அணுயுக மனிதன் அறிவை மிகமிக அதிகமாக வளர்த்துக் கொண்டான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சந்திர மண்டலத்திற்குப் போகின்ற அளவிற்கு அறிவை வளர்த்துக்கொண்ட இன்றைய சமுதாயம், மனிதனுடைய மனத்தில் அமைதியை வளர்க்க என்ன செய்துள்ளது என்ற வினாவை எழுப்பினால், விடை கிடைக்காமல் அவதியுற நேரும். இதே கருத்தைத்தான் தாயுமான அடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/43&oldid=660008" இலிருந்து மீள்விக்கப்பட்டது