பக்கம்:புதிய கோணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புதிய கோணம்

“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்

அரிது’ (தாயு. தேசோ,8)

என்றும்

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ?” (தாயு. பரி, 9)

என்றும் பேசுகிறார்.

மனிதன் என்பவனுக்குக் குறிக்கோள் என்ற ஒன்று இருந்தே தீரல்வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, விலங்கு வாழ்க்கை என்றே சொல்லப் பெறும் அறிவு உலகத்திற்குக் குறிக்கோள் அமைந்து விட்டது. மேலும்மேலும் புதியன காண்டல், இயற்கையின் ரகசியங்களை ஆராய முற்படுகின்ற விஞ்ஞான அறிவு, ஆகிய துறைகளில் குறிக்கோள் ஒன்று இருக்கின்ற காரணத்தால் அந்தந்தத் துறை

களில் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகின்றோம். ஆனால், உணர்வுத் துறையில் குறிக்கோள் இல்லாமல் வாழத் தொடங்கி

விட்டோம். 19-ஆம் நூற்றாண்டின் இடையில் தோன்றிய விஞ்ஞான வளர்ச்சி, அதன் பயனாக எதனையும் அறிவின் துணை கொண்டே சாதித்து விட முடியும் என்ற தவறான கொள்கை, அந்த நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய உலகாயதக் கருத்துகள் என்ற இரண்டும் கூடி அந்நாளைய மனிதனின் வாழ்க்கை மதிப்புகளை (Values in Life)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/44&oldid=660009" இலிருந்து மீள்விக்கப்பட்டது