பக்கம்:புதிய கோணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே செல்கிறோம்? 37

அழித்துவிட்டன. அது வரையில் வாழ்க்கையின் சிறந்த மதிப்புகள் என்று எவ்வெவற்றை மனிதன் நம்பி இருந்தானோ அவை எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன. குழந்தைகள் சாப்பாட்டை மறந்து புதிய விளையாட்டுப் பொருள்களில் ஈடுபடுவது போல 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனிதன் வாழ்க்கையின் மிக இன்றியமையாத இந்த மதிப்புகளை (Values in Lite) மறந்து விஞ்ஞானப் புதுமையிலும் அதன் பயனாக அமைந்த உலகாயதக் கொள்கைகளிலும் தன்னை மறந்துவிட்டான். அதன் பயன் இன்று விஸ்வரூபம் எடுத்து சமுதாயத்தையே ஆட்டிப்படைக்கின்ற துயரச் சூழலாகக் காட்சி அளிக்கக் காண்கிறோம்.

மனிதனுடைய மனம் மிக விந்தையான ஒன்று ஆகும். சில அடிப்படையான மதிப்புகளைப் பற்றிக் கொண்டுதான் மனிதன் மனம், பண்பாடு, உணர்வு என்பவற்றில் வளர்ச்சி அடைந்து வந்துள்ளான். இவை மூன்றுக்கும் அடிப்படையான அந்த மதிப்புகளைத் தகர்த்துவிட்டால், புதிய சில மதிப்புகள் பழைய மதிப்புகள் இருந்த இடத்தில் அமர்த்தப் பெறவேண்டும். அங்ஙனம் அமர்த்தப் பெறவில்லை ஆனால், மனிதன் உயிரில்லாத உடம்பு போலவும் தெய்வம் இல்லாத கோயில் போலவும் பாழடைந்து விடுவான். வாழ்க்கை மதிப்புகளை அழித்த 20-ஆம் நூற்றாண்டு மனிதன் இந்த மதிப்புகளை இழந்த பிறகு மனிதன் அடையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/45&oldid=660010" இலிருந்து மீள்விக்கப்பட்டது