பக்கம்:புதிய கோணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புதிய கோணம்

வளர்ச்சி முழுத்தன்மை பெற்றுச் செம்மை அடைய முடியாது என்ற பேருண்மையை மறந்துவிட்டான். ஒருவேளை பழைய மதிப்புகளை ஒழித்த நேரத்தில் புதிய சில மதிப்புகளை உற்பத்தி செய்து பழைய இடத்தில் வைத்திருந்தாலும் மனிதன் ஓரளவுக்கு அமைதியுடன் வளர்ந்திருக்க முடியும். ஆனால், அழிவு வேலையில் ஈடுபட்ட 20-ஆம் நூற்றாண்டு மனிதன் இந்த ஆக்கப்பணியைச் செய்ய மறந்ததன் பயனாக இன்றைய அல்லல்கள் காட்சியளிக்கின்றன.

மிக அடிப்படையான சமுதாய ஒழுக்கம், ஆண் பெண் உறவு, பெரியவர்களிடமும் மற்றவர்களிடமும் நடந்துகொள்ள வேண்டிய முறை, கல்வியின் பயன், வாழ்க்கையின் குறிக்கோள் ஆகிய அனைத்தும் இன்று தடுமாறி நிற்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் சமயப் பிரசாரம் செய்கின்றவர்கள் கூட நல்லொழுக்கம் பற்றிய அடிப்படைக் கருத்துக் களையும், ஆண் பெண் உறவு பற்றிய கொள்கை களையும் இப்புதிய சகாப்தத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலையில் தாம் இருப்பதாகக் கருதுகிறார்கள். ஒரு காலத்தில் கூடா ஒழுக்கம் என்று பேசப்பெற்றது இன்றைய நாளில் தவறு என்ன என்று கேட்கப்படுகின்ற சூழ்நிலைக்கு வந்து விட்டது. குடும்பம் என்ற ஒன்று தேவைதானா, பெரியவர் சிறியவர், ஒருவர் வார்த்தைக்கு ஒருவர் கட்டுப்படுதல் ஆகிய இந்த வழக்கங்களும், மதிப்புகளும், கொள்கை களும் இன்று செலாவணியாகக் கூடியவையா என்ற கேள்விகளுங் கூடத் தோன்றியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/46&oldid=660011" இலிருந்து மீள்விக்கப்பட்டது