பக்கம்:புதிய கோணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே செல்கிறோம்? 39

இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது 20-ஆம் நூற்றாண்டு மனித குலம் எல்லாவற்றையும் பெற்றும், எல்லா வசதிகளையும் அடைந்தும், முழு வளர்ச்சி பெறாமல், எங்கே செல்கிறோம்? என்ற வினாவிற்கு மட்டும் விடை தெரியாமல், நடுக்கடலில் சுக்கான் முறிந்த கப்பல் தலைவன்போல தத்தளிக்கின்றதைக் காண்கிறோம். இத்தனை வளர்ச்சிகளையும் விட்டு விட்டுக் கூடப் பழைய அமைதியை நாடிச் செல்ல, முன்னேற்றம் அடைந்த அந்த மேலை நாட்டு சமுதாயத்தில் சிலர் முயற்சிப்பதைக் காண்கிறோம். அமெரிக்க ‘ஹறிப்பிகளுடைய வாழ்க்கையைப் பார்த்தால், புதிய மதிப்புகளையும், முன்னேற்றம் எனப்படுகின்ற வாழ்வையும் ஒதுக்கி, அமைதியைத் தேடி அந்தச் சமுதாயம் அலைகின்றதை அறிய முடிகின்றது. நியூயார்க் நகரத்தில் செல்வந்தர்களின் பிள்ளைகள் பலர் ஹிப்பிகளாக மாறி விடியற்

Eff"#ff}{R} நேரத்தில் பஜனை பாடிக்கொண்டு செல்கின்றார்கள் என்றால் அதைக்கண்டு நம்முடைய சமுதாயம் எள்ளி நகையாடலாம். ஆனால்,

“எங்கே செல்கிறோம்? என்ற வினாவிற்கு ஒரு வகையான விடையை அந்த ‘ஹறிப்பிகள் காண முயல்கிறார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது. வளர்ச்சியின் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட காரணத்தால் அவர்கள் இந்த வினாவிற்கு புதிய முறையில் விடை காண முற்படுகின்றார்கள். இந் நாட்டில் வாழ்கின்ற நாம் இன்னும் வளர்ச்சியை நன்கு பெறாத காரணத்தால், எங்கு செல்கின்றோம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/47&oldid=660012" இலிருந்து மீள்விக்கப்பட்டது