பக்கம்:புதிய கோணம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iii


முன்னுரை

புதிய கோணம் என்னும் இந்த நூல் பல்வேறு காலங்களில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாத இதழ்கள், வார இதழ்கள் என்பவை போக மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெளிவரும் மாத, வார இதழ்களில் அவ்வப்பொழுது நான் எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்தே புதிய கோணம் என்ற இந்த நூல் வெளிவருகிறது. எஞ்சியுள்ள கட்டுரைகள் இதனை அடுத்து மற்றொரு தொகுதியாக வெளிவர உள்ளது.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற கொப்பரைத் தேங்காய், புலியார் நட்பு, பழைய சிறுகதை, கபிலரும் பாரியும், ‘க’னாவும் ‘கா’வன்னாவும், கவிஞன் கண்ட விஞ்ஞானம் என்பவை சங்க இலக்கியங்களை அடித்தளமாகக் கொண்டு எழுதப் பெற்றவை. புதிய கோணம் என்பது சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையாகும். இவை அனைத்தும் பல்லாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பெற்றவை. என்னுடைய நூலைப் படித்து பழக்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/5&oldid=1405055" இலிருந்து மீள்விக்கப்பட்டது