பக்கம்:புதிய கோணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புதிய கோணம்

முயற்சியுடன் ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்ற அரும்பாடுபடுகின்றனர். இத்திட்டம் முடிந்து பயன் தரும் பொழுது, இன்று ஆட்சி செலுத்துபவர்களே அப்பொழுதும் இருப்பார்கள் என்று கூறுவதற் கில்லை. எனினும், இன்று ஆள்பவர்கள் அதுபற்றிக் கவலை கொள்வதில்லை. தாங்கள் மட்டும் ஆட்சியில் அமரமுடியுமா என்பது பற்றிக் கவலை கொள்ளாமல் திட்டங்களை நிறைவேற்ற முற்படுகிறார்கள். ஏன் ? இதுதான் குறிக்கோள் என்று கூறப்படும். நாட்டுக்கும் பெரும்பாலான மக்கட்கும் நலந்தருவது எது என்று ஓயாமல் நினைந்து அவ்வாறு நலந்தருவனவற்றை நாடுதலே ஆட்சியாளருடைய ‘குறிக்கோள்’ எனப்படும்.

சிறந்த குறிக்கோள் இல்லாதவர்களும் இல்லாத கட்சியும், எத்துணை வன்மையும் கூட்டச் சிறப்பும் உடையதாயினும் சரி, பயன் தாரா. இன்றைய சூழ் நிலையில் உலக முழுவதிலும் கட்சிகள்தாம் நாட்டை ஆள்கின்றன. மக்களாட்சி நடைபெறுவதாகப் பறை சாற்றப்படும் நாடுகளிலும், தனிப்பட்டவர் ஆட்சி என்று கூறப்பெறும் நாடுகளிலும் உண்மையில் நடைபெறுவது கட்சி ஆட்சியே! கட்சியாட்சியின் குறைவு நிறைவுகளை ஆய்வது நம்முடைய கருத்தன்று. என்றாலும், ஒரு கட்சி சிறப்படைவதும் சிறப்பை இழப்பதும் அதனுடைய குறிக்கோளை வைத்தேயாகும். குறிக்கோள் இல்லாதவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/50&oldid=660016" இலிருந்து மீள்விக்கப்பட்டது