பக்கம்:புதிய கோணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியார் நட்பு 43

கட்சித் தலைவராகவோ நாட்டை ஆள்பவராகவோ இருந்துவிடின் நாட்டுக்குத் தீமை இதனைவிட வேறு தேவையில்லை. எனவே, 116ύff அடங்கிய நாட்டையோ கட்சியையோ தலைமை வகித்து நடத்துபவனுக்கு வேண்டிய உயர்ந்த குறிக்கோளைப் பற்றிப் பழந்தமிழ்ப் புலவன் ஒருவன் பாடிய பாடலை இங்குக் காணலாம்.

உள்ளுவது எல்லாம் உயர்(வு) உள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ (குறள், 596)

என்ற குறளில் வள்ளுவர் குறிக்கோளைப் பற்றித் தான் குறிப்பிடுகிறார். ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாக இருத்தல் வேண்டும்? அதுமிக உயர்ந்ததாக இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின் அது கைகூடாததாக வும் இருக்கலாமோ எனில் இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெரு நன்மை செய்ய வேண்டுமென்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்கவேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்துவிட்டால், அவனை யார் தடை செய்ய முடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/51&oldid=660017" இலிருந்து மீள்விக்கப்பட்டது